Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மோடி தியானம் செய்த குகையின் ஒருநாள் ... மாமல்லபுரம் பையனூரில் உழவாரப் பணி மாமல்லபுரம் பையனூரில் உழவாரப் பணி
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி திரவுபதியம்மன் கோவிலில், 18ம் நாளில் விழுந்தான் துரியோதனன்
எழுத்தின் அளவு:
திருத்தணி திரவுபதியம்மன் கோவிலில், 18ம் நாளில் விழுந்தான் துரியோதனன்

பதிவு செய்த நாள்

20 மே
2019
01:05

திருத்தணி: திரவுபதியம்மன் கோவிலில், நேற்று (மே., 19ல்) நடந்த தீமிதி விழாவில், காலை யில், துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும், மாலையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி தீ மிதித்தனர்.

திருத்தணி பழைய திரவுபதியம்மன் கோவிலில், தீமிதி திருவிழா, 2ம் தேதி கொடியேற்றத் துடன் துவங்கியது. நேற்று (மே., 19ல்), 18ம் நாளில், காலை, 9:00 மணிக்கு, கோவில் வளாகத்தில், துரியோதனன் படுகளம் நடந்தது. நிகழ்ச்சியில், துரியோதனன் படுகளம் பகுதிக்கு, இழுத்து வந்து வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. பின், துரியோதனன் ரத்தத்தால் திரவுபதியம்மன் கூந்தல் முடிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து, கோவில் வளாகத்தில், திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள, 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான பெண்கள் வந்து பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். சிலர், ஆடு, கோழி பலியிட்டும் வழிபட்டனர்.காலை, 11:50 மணிக்கு, அக்னி குண்டத்தில் தீ மூட்டும் நிகழ்ச்சியும், மாலை, 6:00 மணிக்கு, பூ கரகம் ஊர்வலத்துடன், 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து, தீமிதித்தனர்.பின், உற்சவர் திரவுபதி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருத்தணி, டி.எஸ்.பி., சேகர் தலைமையில், 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இன்று (மே., 20ல்) காலை, 11:00 மணிக்கு, தர்மர் பட்டாபிஷேகம் நடக்கிறது.காஞ்சிபுரம் மாவட்டம், கூடுவாஞ்சேரி அடுத்த, கல்வாய் கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில், நேற்று (மே., 19ல்) காலை, 7:00 மணியிலிருந்து, காலை, 11:00 மணி வரை, துரியோதனன் படுகளம் நடைபெற்றது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயில் பழமையும் புரதான சிறப்பையும் பெற்ற சிவாலயம் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
சபரிமலை: -மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. பிப்., 17 வரை பூஜைகள் ... மேலும்
 
temple news
சோழவரம்: சோழவரம் அடுத்த எருமைவெட்டிப்பாளையம் கிராமத்தில், காமாட்சி அம்பாள் சமேத வரமுக்தீஸ்வரர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், –  தமிழகத்தில் உள்ள பழமையான 18 சைவ ஆதினங்கள் ஒன்றான சூரியனார் கோவில், சிவாக்கிர யோகிகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar