நடுவீரப்பட்டில் திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20மே 2019 01:05
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு திரவுபதியம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா நடந்தது.விழாவை முன்னிட்டு கடந்த மாதம் 17ம் தேதி கொடியேற்றப்பட்டு விழா துவங்கியது.
கடந்த10 ம் தேதி முதல் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்து வருகிறது. 12ம் தேதி இரவு 7:00 மணிக்கு அர்ச்சுனன், திரவுபதியம்மன் திருக்கல்யாணம் நடந்தது.கடந்த 17ம் தேதி காலை அனைத்து சுவாமிகளுக்கும் சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்தது. மதியம் 12 மணிக்கு அரவாண் வீதி உலா நடந்தது. மாலை 6:00 மணிக்கு தீமிதி திருவிழா நடந்தது. இரவு 7:00 மணிக்கு அம்மன் வீதி உலா நடந்தது.