பதிவு செய்த நாள்
24
மே
2019
12:05
அந்தியூர்: அந்தியூர், பத்ர காளியம்மன் கோவிலில், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை, உண்டியல் காணிக்கை எண்ணப்பரடுகிறது. இதன்படி கோவிலில் உள்ள மூன்று உண்டியல்கள், பண்ணாரி மாரியம்மன் கோவில் துணை ஆணையர் பழனிக்குமார் தலைமையில், நேற்று (மே., 23ல்) திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. தங்கம், 89.500 கிராம், வெள்ளி, 170 கிராம் மற்றும் ரொக்கப்பணமாக, 5.51 லட்சம் ரூபாய் கிடைத்ததாக, அதிகாரிகள் தெரிவித்தனர். காணிக்கை எண்ணும் பணியில், மகளிர் குழுவினர் ஈடுபட்டனர்.