பதிவு செய்த நாள்
25
மே
2019
11:05
திருப்பூர்: பருவமழை தவறாமல் பெய்ய வேண்டி, திருப்பூர் ஸ்ரீகாசிவிஸ்வநாதர் கோவிலில் நேற்று, நந்திக்கு நாகலிங்க மலர்களால் பூஜை செய்யப்பட்டது.
திருப்பூர் ஊத்துக்குளி ரோடு, ஸ்ரீகாசிவிஸ்வநாதர் கோவிலில், மழை வேண்டி நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. மூலவருக்கு மகா அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நடந்தது. அதனை தொடர்ந்து, அதிகாரநந்திக்கு, 16 வகை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.தீர்த்தங்களால் குளிர்விக்கப்பட்ட நந்தியம்பெருமானுக்கு, நாகலிங்க மலர்களை கொண்டு அர்ச்சனை செய்யப்பட்டது. கோவில் வளாகத்தில் உள்ள மரத்தில் பூத்த நாகலிங்க மலர்களை கொண்டு, விசஷே அர்ச்சனையும், பூஜைகளும் செய்யப்பட்டன. இறுதியாக, 108 நாகலிங்க மலர் அபிஷேகமும் நடந்தது.