பதிவு செய்த நாள்
27
மே
2019
02:05
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, காவிரியாற்றில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். கிருஷ்ணராயபுரம் மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த, 12ல், கம்பம் நடுதலுடன் துவங்கியது. நேற்று முன்தினம் (மே., 25ல்), அழகு நாச்சியம்மன் கோவிலில் இருந்து, அம்மன் அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை, திருக்கண் மல்லீஸ்வரர் கோவில் அருகே, காவிரி ஆற்றில் இருந்து, பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். இரவு கரகம் பாலித்தல், அம்மன் திரு வீதிஉலா நடந்தது. இன்று
(மே., 27ல்) மாலை சரம் குத்துதல் நிகழ்ச்சியும், அலகு குத்துதல், அக்னிச் சட்டி எடுத்தல், மாவிளக்கு, கிடா வெட்டுதல் நிகழ்ச்சிகள் நாளையும் (மே., 28ல்) நடக்க உள்ளன.