பதிவு செய்த நாள்
28
மே
2019
02:05
ஈரோடு: ஈரோடு, ரங்கம்பாளையம் காமாட்சி அம்மன் கோவில், கும்பாபிஷேகத்துக்காக புதுப்பிக்கப்பட்டு கடந்த, 26ல் தீர்த்தம் எடுத்து வருதலுடன் பூஜை துவங்கியது. நேற்று (மே., 27ல்) மாலை, விநாயகர் வழிபாடு, வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரம், முதற்கால யாக பூஜை, தீபாராதனை நடந்தது. இன்று (மே., 28ல்) காலை, 8:30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை மாலை, 5:30 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜை, இரவில் கோபுர கலசம் வைத்தல், சுவாமிக்கு அபிஷேகம் நடக்கிறது. வரும், 29ல் காலை, 9:00 மணிக்கு காமாட்சி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. முன்னதாக காலை, 7:00 மணி முதல் அன்னதானம் நடக்கிறது.