பதிவு செய்த நாள்
30
மே
2019
12:05
பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த வண்ணாங்கோவில் பிரிவில் உள்ள அருள்மிகு பட்டத்தரசியம்மன், மதுரை வீரன் திருக்கோவில் வைகாசி திருவிழா நடந்தது.
விழாவையொட்டி, அன்றாடம் அம்மனுக்கு சிறப்பு ஆராதனைகளுடன் இருகால பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, பால்கம்பம் நடுதல், ஏழுநாட்கள் கம்பம் சுற்றி ஆடும் நிகழ்ச்சிகள் நடந்தன. ஜலம் எடுத்து வருதல், அம்மன் அழைப்பும், மதுரை வீரன் பொம்மியம்மாள், வெள்ளையம்மாளுக்கு திருக்கல்யாண உற்வசமும் நடந்தன.
பண்டிகை நாளன்று, அதிகாலையில், 5.00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சக்திக்கரகங்கள் பம்பை, உடுக்கை, மேளதாள வாத்தியங்கள் முழங்க, ஜோதிபுரம் விநாயகர் கோவிலிலிருந்து ஊர்வலமாக அழைத்து வரப்பட்டன. மதியம், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும், வழிபாடுகளும் நடந்தன.மாவிளக்கு ஊர்வலம் ஜோதிபுரம் தண்டுமாரியம்மன் கோவிலில் இருந்து மாலை 4:00 மணிக்கு புறப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான பெண்கள், முளைப் பாரியுடன் மாவிளக்குகளை கையில் ஏந்தி வந்தனர். அக்கினிக் கரகங்கள் எடுத்து வரப்பட்டன. சிங்க வாகனத்தில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று (மே., 30ல்) மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.