பதிவு செய்த நாள்
30
மே
2019
01:05
குளித்தலை: முதலைப்பட்டி செல்லாயி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா விமரிசையாக நடந்தது. குளித்தலை அடுத்த, முதலைப்பட்டியில், செல்லாயி அம்மன் கோவில் புனரமைப்பு பணி முடிந்து, கும்பாபிஷேகம் விழா துவங்கியது. நேற்று முன்தினம் (மே., 28ல்), காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தகுடம் எடுத்துக் கொண்டு, பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர்.
அதன் பின் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. யாகசாலையில் மூன்று கால பூஜை செய்து, நேற்று (மே., 29ல்) காலை, 9:45 மணியளவில், சிவாச்சாரியார்கள் கோபுர கலசத்திற்கு தீர்த்தம் ஊற்றி, கும்பாபிஷேகம் நடந்தது.
இவ்விழாவில் தோகைமலை தமிழ் சங்க நிறுவனர் காந்திராஜன், முன்னாள் பஞ்., தலைவர் மணிகண்டன், முன்னாள் துணை சேர்மன் சின்ன வழியான் உள்ளிட்ட கோவில் திருப்பணி குழுவினர் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.