பதிவு செய்த நாள்
30
மே
2019
02:05
மோகனூர்: மோகனூர் புதுத்தெருவில், புனித செபஸ்தியார் ஆலயம் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும், தேர்த்திருவிழா, விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்தாண்டு விழா, கடந்த, 26ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று மாலை, பங்கு தந்தை பிரகாஷா தலைமையில் கொடியேற்றப்பட்டது.
மறுநாள், வணக்க நாள் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் (மே., 28ல்) காலை, 10:30 மணிக்கு, சேலம் மாவட்டம், ஓமலூர் புனித ஜான் பிரிட்டோ மெட்ரிக் பள்ளி முதல்வர் செபாஸ்தியான்
தலைமையில் திருப்பலி நடந்தது. மாலை, 5:00 மணிக்கு, பொங்கல் மந்திரிப்பு, மாலை, 6:30 மணிக்கு, ஆடம்பர தேர் பவனி கோலாகலமாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட மின்
தேரில், புனிதர் எழுந்தருளி திருவீதி உலா வந்தார்.
வழிநெடுகிலும் பக்தர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி, மாலை அணிவித்து, புனிதரை வணங்கினர். ஏற்பாடுகளை, பங்கு தந்தை, பங்கு மக்கள் செய்தனர்.