பதிவு செய்த நாள்
30
மே
2019
02:05
நாமக்கல்: கந்தபுரி, சுந்தர மாரியம்மன் கோவில் திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். நாமக்கல் - துறையூர் சாலை, ரெட்டிப்பட்டி பஞ்., கந்தபுரியில் பிரசித்தி பெற்ற சுந்தர மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.
கோவில் திருவிழா, கடந்த, 12ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. 19ல் மறுகாப்பு நிகழ்ச்சி, தினமும், அம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. 26ல் அம்மனுக்கு
அபிஷேகம் செய்வதற்காக, ப.வேலூர் காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து வந்தனர். கடந்த, 27ல் மாவிளக்கு, நேற்று முன்தினம் (மே., 28ல்) பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல், நேற்று (மே., 29ல்), மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. திருவிழாவில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை தரிசனம்
செய்தனர்.