சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் பிரம்மோற்சவம் துவங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31மே 2019 11:05
செஞ்சி:செஞ்சி அடுத்த சிங்கவரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ரங்கநாதர் கோவிலில் 10 நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
விழாவையொட்டி, நேற்று முன்தினம் காலை 7:00 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாதருக்கு சிறப்பு திருமஞ்சனமும், 8:00 மணிக்கு கொடி மரத்திற்கு திருமஞ்சனமும் செய்தனர். 9:00 மணிக்கு சுவாமி கொடிமரத்தின் அருகே எழுந்தருளச் செய்து விசேஷ பூஜை செய்து, கொடியேற்றினர்.தொடர்ந்து இரவு ஹம்சவாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. தொடர்ந்து தினமும், சிறப்பு அலங்காரம் மற்றும் விசேஷ பூஜையும், வீதியுலாவும் நடக்கிறது.விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடித்தல் 5ம் தேதி காலை 9:00 மணிக்கு நடைபெற உள்ளது. 6ம் தேதி குதிரை வாகனமும், 7ம் தேதி சந்திரபிரபையில் சுவாமி ஊர்வலமும் நடக்கிறது.