சிங்கம்புணரி: சிங்கம்புணரி சித்தர் முத்துவடுகநாதர் கோயிலில் ஒவ்வொரு மாதமும் அமாவாசையன்று சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று வைகாசி அமாவாசையை முன்னிட்டு காலை 10 :00 மணிக்கு சந்தனம், மஞ்சள், தேன் போன்ற 21 வகையான அபிஷேகம், ஆராதனை நடந்தது. 12:00 மணிக்கு சுவாமி தங்க கவசத்தில், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.