சங்கராபுரம் பெரியநாயகி அம்மன் கோவிலில் அமாவாசை திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜூன் 2019 03:06
சங்கராபுரம் : சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலம் பெரியநாயகி அம்மன் கோவிலில் அமாவாசை திருவிழா நடந்தது.
அதனையொட்டி, அம்மனுக்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. இரவு அம்மனுக்கு ஊஞ்சல் தாலாட்டு நிகழ்ச்சி மற்றும் தீச்சட்டி ஊர்வலமும் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.