பதிவு செய்த நாள்
05
ஜூன்
2019
03:06
திருத்தணி: திருத்தணி அடுத்த, மத்தூர், மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில், நேற்று (ஜூன்., 4ல்), செவ்வாய்கிழமை என்பதால், மூலவருக்கு, காலை, 8:00 மணிக்கு, 108 பால்குட அபிஷேகம் நடந்தது. மதியம், 12:00 மணிக்கு, உச்சிகால பூஜையும், மாலை, 3:00- மணிக்கு ராகுகால பூஜையும் நடந்தது. அப்போது திரளான பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபட்டனர். இதே போல், நகரி, டி.ஆர்.கண்டிகையில் உள்ள தேசம்மன் கோவிலிலும், மூலவர் அம்மனுக்கு, சிறப்புப் பூஜைகளும், தீபாராதனை நடந்தது. காலை முதல், மாலை வரை, தொடர்ந்து பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.