பதிவு செய்த நாள்
08
ஜூன்
2019
11:06
குன்றத்தூர்:குன்றத்தூர் சுப்ரமணியசுவாமி கோவிலில், உண்டியல் காணிக்கை எண்ணப் பட்டது.
குன்றத்தூரில், பிரசித்திப்பெற்ற, சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. மலைக்குன்றின் மேல் அமைந்துள்ள இக்கோவிலுக்கு, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து, தினசரி,
ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.முக்கிய நாட்களில், வெளியூர்களில் இருந்தும் வருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள், உண்டியலில் காணிக்கை செலுத்துவது வழக்கம்.
நிர்வாகம் சார்பில், மூன்று மாதத்திற்கு ஒரு முறை, உண்டியல் திறந்து எண்ணப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் (ஜூன்., 5ல்), அதிகாரிகள் தலைமையில், உண்டியலை திறந்து கணக்கிட்டனர்.ஆறு உண்டியல்களில் இருந்த காணிக்கையை, 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் எண்ணினர். இதில், 16 லட்சம் ரூபாய் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.