பண்ருட்டி அடுத்த வாணியம்பாளையம் மாரியம்மன் கோவிலில் செடல் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜூன் 2019 12:06
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த வாணியம்பாளையம் கிராமத்தில் உள்ள தீவனூர் மாரியம்மன் கோவிலில் செடல் திருவிழா நேற்று (ஜூன்., 7ல்) நடந்தது. விழாவையொட்டி, நேற்று முன்தினம் (ஜூன்., 6ல்) காலை 6:00 மணிக்கு அனுக்ஞை, கணபதி பூஜை, பகல் 9:00 மணிக்கு அய்யனார் அழைக்கப்பட்டு, பகல் 12:00 மணிக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று (ஜூன்., 7ல்) காலை 7:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பகல் 12:30 மணிக்கு மேல் 2:00 மணிக்குள் செடல் உற்சவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் லாரி, டாடா ஏஸ், வேனை அலகு குத்தி இழுந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இரவு 7:00 மணிக்கு உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.