பதிவு செய்த நாள்
08
ஜூன்
2019
01:06
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலில், எட்டாம் ஆண்டு வருஷாபிஷேக விழா கடந்த, 6ல் விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. நேற்று (ஜூன்., 7ல்) காலை கணபதி வழிபாடு, பூர்ணாஹுதி, தீபாராதனை மற்றும் அபிஷேகம் நடந்தது. இதையடுத்து அம்மனுக்கு அலங்காரம், தீபாராதனை செய்யப்பட்டது. காலை, 9:00 மணி முதல், மதியம், 12:00 மணி வரை மீனாட்சி அம்மையார் திருமணம் குறித்த சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது.
இதில், பர்கூர் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள், கிராம மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மாலை காமாட்சியம்மன் திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இரவு
வாணவேடிக்கை நிகழ்ச்சி நடந்தது.