ஆர்.எஸ்.மங்கலம் அரசாளவந்த அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜூன் 2019 01:06
ஆர்.எஸ்.மங்கலம்:ஆர்.எஸ்.மங்கலம் அரசூரணி கரையில் அமைந்துள்ள ஸ்ரீ அரசாளவந்த அம்மன் கோயில் புதிப்பிக்கப்பட்டு ஜூன் 14ல் கும்பாபிஷேக விழா நடப்பதால் விழா ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.
புதிப்பிக்கப்பட்ட கோயிலில் வர்ணம் தீட்டப்பட்டும், சுவாமி படங்கள் வரையப்பட்டும் கோயில் புதுப்பொலிவு பெற்றுள்ளது. விழாவை முன்னிட்டு இன்று(ஜூன் 11) காலை 7:45 மணிக்கு எஜமானர் சங்கல்பம், விக்னேஸ்வர் பூஜை, கணபதி ஹோமம் ஆகியவற்றுடன் முதல் கால யாகசாலை பூஜைகள் துவங்குகின்றன. தொடர்ந்து ஜூன் 12ல் இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடக்கின்றன. ஜூன் 13ல் நான்காம் மற்றும் ஐந்தாம் கால யாகசாலை பூஜைகள் நடக்கின்றன.ஜூன் 14ல் காலை 6:30 மணிக்கு விக்னேஸ்வர் பூஜை, கோ பூஜையுடன் ஆறாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று, காலை 10:10 மணிக்கு ஸ்ரீ அரசாளவந்த அம்மனுக்கு கும்பாபிஷேக விழா நடக்கிறது.
தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், மாலையில் அம்மன் வீதி உலாவும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை இந்து சமய மன்ற விழா குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.