கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
பழநி:பழநி முருகன்கோயில் உண்டியலில் 33 நாட்களில், ரூ.1 கோடியே 69 லட்சத்து 11 ஆயிரம் காணிக்கையாக கிடைத்துள்ளது. பழநி முருகன் கோயில் உண்டியல்கள் 33 நாட்களுக்குபின் திறக்கப்பட்டு, நேற்று (ஜூன்., 10ல்) கார்த்திகை மண்டபத்தில் எண்ணும்பணி நடந்தது. அதில் ரொக்கமாக ரூ.1 கோடியே 69 லட்சத்து 11 ஆயிரத்து 840ம், தங்கம்- 832 கிராமும், வெள்ளி - 14 ஆயிரத்து 690 கிராமும், வெளிநாட்டு கரன்சிகள்- 364 கிடைத்துள்ளது. இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் (பொ)செந்தில்குமார், திண்டுக்கல் உதவிஆணையர் சிவலிங்கம், முதுநிலைக் கணக்காளர் மாணிக்கவேல், மேலாளர் உமா, அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இன்றும் (ஜூன்., 11ல்) உண்டியல் எண்ணிக்கை நடக்கிறது.