கெட்ட வழக்கங்கள் பலரையும் பாழ்படுத்திக் கொண்டிருக்கின்றன. முன்பெல்லாம் குடிப்பது பாவமாக கருதப்பட்டது. இப்போது பகிரங்கமாக குடிக்கிறார்கள். சிலர் சுவைக்காகவும், சிலர் துன்பம் துடைக்கும் மருந்தாகவும் கருதுகிறார்கள். குடிப்பது அவர்கள் வாழ்வை அழிக்கும் என்பது புரியவில்லை. காதல் என்னும் போர்வையிலும் சிலர் சீரழிந்து பெற்றோருக்கு கெட்ட பெயரை ஏற்படுத்துகிறார்கள். இவர்களுக்காக ”கடவுளே! இந்த சமுதாயம் கெட்டு சீரழிகிறது. மனிதர்களின் பாவத்தை துடைக்க சிலுவையில் மறைந்த நீர், எம் பாவங்களைத் துடைக்க வேண்டும். மீண்டும் மலர்ச்சியான சமுதாயம் அமைய வேண்டும்” என ஜெபியுங்கள். யோவான் என்ற ஞானி, “பாவங்களை நாம் அறிக்கையிட்டால் மன்னித்து, நம்மைச் சுத்திகரிப்பதற்கு உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்” என்கிறார். கெட்ட பழக்கம் உள்ளவர்கள், கடவுளிடம் தங்களை ஒப்படைத்தால் நிச்சயம் மீளமுடியும்.