முதுகுளத்தூர் அருகே கருப்புசாமி கோயிலில் வருஷாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜூன் 2019 02:06
முதுகுளத்தூர்:முதுகுளத்தூர் அருகே ஒருவானேந்தல் கிராமத்தில் உள்ள கருப்புசாமி கோயிலில் உள்ள விநாயகர்,பரிவார தேவதைகளுக்கு வருஷாபிஷேக விழா நடைபெற்றது. யாகசாலை பூஜைகளுடன் துவங்கப்பட்டு 21 வகையான சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனைகள் நடந்தது.பின்பு கருப்புசாமி சந்தனத்தால் அலங்கரிக்கப்பட்டார். கிராம மக்கள் சார்பில் பொது அன்னதானம் நடைபெற்றது.