Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, ... கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) பணவரவு அதிகரிக்கும் கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) ...
முதல் பக்கம் » புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206)
மிதுனம்: (மிருசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) பெண்களால் நன்மை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மிதுனம்: (மிருசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) பெண்களால் நன்மை

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2019
01:06

இம்மாதம் சுக்கிரனால் ஜூன் 29க்கு பிறகு நற்பலன் உண்டாகும். மற்ற கிரகங்கள் அனைத்தும் சாதகமற்ற நிலையில் இருப்பதால் எதையும் சற்று முயற்சி எடுத்தே நிறைவேற்ற வேண்டியதிருக்கும். ஆனால் அதற்கான பலன் கிடைக்காமல் போகாது. சூரியன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் அனாவசிய பேச்சைத் தவிர்க்கவும். வீண்அலைச்சலும், சோர்வும் ஏற்படும். செல்வாக்கு பாதிக்கப்படலாம்.

குருபகவான் உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் இருக்கிறார். இது சாதகமான நிலை என்று சொல்ல முடியாது. அவரால் உடல்நிலை பாதிக்கப்படலாம். மனதில் தளர்ச்சியை ஏற்படுத்துவார். அதற்காக கவலை கொள்ள வேண்டாம். குருவின் பார்வை பலத்தால் எந்த இடையூறும் விலகும். மந்தநிலை மாறும். மனதில் துணிச்சல் பிறக்கும். பணவரவு கூடும். பகைவர்களின் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரணடையும் நிலை ஏற்படும்.

குடும்பத்தில் புதனால் வீட்டில் பிரச்னை ஏற்படலாம். உறவினர் வகையில் கருத்துவேறுபாடு வரலாம். சுக்கிரனால் மாத பிற்பகுதியில் பெண்களால் நன்மை கிடைக்கும். அவர்களால் பொன், பொருள் சேரும். விருந்து விழா என சென்று வருவீர்கள்.

சகோதரிகள் உதவிகரமாக இருப்பர். குறிப்பாக ஜூலை 2,3ல் அதிக நன்மை கிடைக்கும். ஜூன் 27,28,29ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். அதே நேரம் ஜூலை8,9ல் அவர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம். சற்று விலகியிருக்கவும். ஜூலை 6,7ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். ஜூன் 24க்கு பிறகு செவ்வாயால் சிலரது வீட்டில் பொருள் திருட்டு போகலாம். மின்சாரம், நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருப்பது நல்லது.

பணியாளர்கள் சற்று கூடுதலாக உழைக்க வேண்டியதிருக்கும். பணிச்சுமை அதிகரிக்கும். அதிகாரிகளுடன் அனுசரித்து போகவும். வழக்கமாக கிடைக்க வேண்டிய சம்பளஉயர்வு, பதவிஉயர்வுக்கு தடையிருக்காது. முயற்சி எடுத்தால் கோரிக்கைகள் நிறைவேறும். புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் விரும்பிய இடமாற்றத்தை காணலாம். ஜூன் 25,26ல் அலுவலக ரீதியாக முன்னேற்றமான சம்பவம் நடக்கும். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம்.


தொழில், வியாபாரத்தில் நிர்வாகச் செலவு அதிகரிக்கும். வெளியூர் பயணம் அடிக்கடி மேற்கொள்வீர்கள். ஜூன்24க்கு பிறகு அரசு வகையில் சலுகை கிடைப்பது அரிது. மேலும் வரவு, செலவு கணக்குகளை சரியாக வைத்துக் கொள்ளவும்.

ஜூன்30, ஜூலை1,4,5ல் சந்திரனால் தடைகளை சந்திக்க வேண்டியதிருக்கும். ஜூன்16,17, ஜூலை13,14ல் எதிர்பாராத வகையில் வருமானம் கிடைக்கும். பகைவரை எதிர்த்து வெல்லும் ஆற்றல் பிறக்கும்.

முயற்சியில் இருந்த தடை, மனதில் ஏற்பட்ட சோர்வு ஜூன் 29க்கு பிறகு மறையும். அதன் பிறகு கலைஞர்கள் முன்னேற்ற பாதையில் செல்வர். சகபெண் கலைஞர்கள் உதவிகரமாக இருப்பர். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் எதிர்பார்த்த பலனைப் பெற முடியாது. பலன் கருதாமல் உழைக்க வேண்டியதிருக்கும்.

மாணவர்களுக்கு புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் அக்கறையுடன் படிப்பது அவசியம். சக மாணவர்களிடம் விழிப்புடன் பழகவும். குருவின் பார்வையால் தேர்வில கூடுதல் மதிப்பெண் கிடைக்க பெறுவர். மேல்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும்.

விவசாயிகள் உழைப்புக்கு தகுந்த வருமானம் கிடைக்கப் பெறுவர். புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடாமல் போகலாம்.

பெண்கள் வெளியில் பெருமையாக பேசப்பட்டாலும் வீட்டுக்குள் விட்டுக் கொடுப்பது நல்லது. இல்லையென்றால் வீண்மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். வேலையில் பொறுமையும், நிதானமும் தேவை. ஜூன் 29க்குள் சுக்கிரனால் ஆடம்பர பொருட்கள் சேரும். உங்களால் குடும்பம் சிறந்து விளங்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். சுய தொழில் செய்து வரும் பெண்களுக்கு லாபத்துக்கு குறைவிருக்காது.

ஜூன்18,19 ஜூலை15,16 தேதிகள் சிறப்பான நாட்களாக அமையும். ஜூலை6,7ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து சீதனப்பொருள் வரப் பெறலாம்.  உடல்நிலை லேசாக பாதிக்கப்படலாம்.

* நல்ல நாள்: ஜூன் 16,17,18,19,25,26,27,28,29, ஜூலை2,3,6,7,13,14,15,16
* கவன நாள்: ஜூன் 20,21 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 4,8  
* நிறம்: வெள்ளை, பிரவுன்

பரிகாரம்
●  திங்கட்கிழமை மாலையில் சிவாலய தரிசனம்  
●  செவ்வாயன்று முருகனுக்கு பால் அபிஷேகம்
●  தேய்பிறை அஷ்டமியன்று பைரவர் வழிபாடு

பகிர்க copied
 
மேலும் புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206) »
temple news
அசுவினி: நேர்மையாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான மாதமாகும். கேது பூர்வ ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: எப்போதும் முதன்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வரும் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: எடுத்த முடிவில் உறுதியாக இருந்து நினைத்ததை சாதித்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: கனிவான குணமும் பிறருக்கு உதவி செய்யும் மனமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஒவ்வொன்றையும் அனுபவத்தின் வழியாக கற்று முன்னேற்றம் அடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar