Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 ... மிதுனம்: (மிருசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) பெண்களால் நன்மை மிதுனம்: (மிருசீரிடம் 3,4, திருவாதிரை, ...
முதல் பக்கம் » புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206)
ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) குருவால் பதவி உயர்வு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) குருவால் பதவி உயர்வு

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2019
01:06

முக்கிய கிரகங்களில் 7ல் உள்ள குரு நன்மை தருவார். சுக்கிரன் ஜூன்29ல் உங்கள் ராசியில் இருந்து மிதுனத்திற்கு மாறினாலும் மாதம் முழுவதும் நன்மை ஏற்படும். செவ்வாய் ஜூன்24ல் மிதுனராசியில் இருந்து கடக ராசிக்கு மாறுவதன் மூலம் நன்மை தர உள்ளார்.

குரு 7ம் இடத்தில் இருப்பது மிக உயர்வான நிலை. மேலும் குருவின் 5-ம் இடத்துப் பார்வையும் சிறப்பாக உள்ளது.  குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். சுபநிகழ்ச்சி நடந்தேறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவையனைத்தும் பூர்த்தியாகும். வசதி வாய்ப்புகள் பெருகும். சூரியன், புதன் 2-ம் இடத்தில் இருப்பதால் சிலர் வீண் அவப்பெயருக்கு ஆளாகலாம். பொருள் விரயம் ஏற்படலாம். ஜூன் 24 வரை செவ்வாய் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் சிலரது வீட்டில் திருட்டு போகலாம். மின்சாரம், நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருப்பது நல்லது.  

குடும்பத்தில் திட்டமிட்ட செயல்கள் நடந்தேறும்.  ஜூன் 24க்கு பிறகு பக்தி எண்ணம் மேம்படும். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள். பெண்களால் நன்மை கிடைக்கும். அவர்களால் பொன், பொருள் சேரும். விருந்து விழா என சென்று வருவீர்கள்.  குறிப்பாக ஜூன்30, ஜூலை1ல் உதவிகரமாக இருப்பர். ஜூன் 25,26ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். அதே நேரம் ஜூலை 6,7ல் உறவினர்கள் வகையில் வீண் விரோதம் வர வாய்ப்புண்டு. சற்று ஒதுங்கி இருக்கவும்.

பணியாளர்களுக்கு குருவால் உத்தியோகம் சிறப்படையும். பதவி உயர்வும் கிடைக்கும். மாத முற்பகுதியில் அரசு ஊழியர்கள் வேலையில் கவனமுடன் இருப்பது நல்லது. ஜூன் 22,23,24 சிறப்பான நாட்களாக அமையும். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம். ஜூன் 24க்கு பிறகு போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலையை அடைவர். ஜூன்29க்கு பிறகு அரசு ஊழியர்கள் முன்னேற்றம் காண்பர்.

அரசு வகையில் விண்ணப்பித்த கடனுதவி எளிதில் கிடைக்கும். வியாபாரிகளுக்கு  நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள்.  பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம்  நல்ல முன்னேற்றம் அடையும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும். செவ்வாயால் பகைவர்கள் வகையில் இருந்த இடையூறு, அரசு வகையிலுள்ள அனுகூலமற்ற போக்கு  முதலியன ஜூன் 24க்கு பிறகு மறையும். அதுவரை வரவு, செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். ஆன்மிக சம்பந்தபட்ட மற்றும் பூஜை பொருட்கள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர். சுக்கிரனால் ஜூன் 29க்கு பிறகு வங்கி கடன் எளிதாக கிடைக்கும். ஜூன்27,28,29, ஜூலை2,3ல் சந்திரனால் தடைகள் வரலாம். வீண்விரயம் ஏற்படலாம். ஜூலை10,11,12ல் எதிர்பாராத வகையில் வருமானம் வரும். பகைவர்களை எதிர்த்து வெற்றி கொள்ளும் ஆற்றல் உருவாகும்.  

கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். சுக்கிரனால் ஜூன் 29க்கு பிறகு மதிப்பு, மரியாதை கூடும். அரசிடம் இருந்து விருது, பாராட்டு போன்றவை கிடைக்கும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சீரான பலனைக் காண்பர். எதிர்பார்த்த பதவி கிடைக்கும்.

விவசாயிகள் கேழ்வரகு, மஞ்சள், பழவகைகள், காய்கறிகள் போன்ற பயிர்களில் அதிக மகசூல் காண்பர். கால்நடை வகையில் எதிர்பார்த்த பலன் கிடைக்காது. ஜூன் 24க்கு பிறகு புதிய சொத்து வாங்குவதற்கான காலம் கனியும்.

மாணவர்கள் கல்வியில் சுமாரான வளர்ச்சி காண்பர். உற்சாகத்தை வரவழைத்துக் கொள்வது நல்லது. இருப்பினும் குருவால் மேல்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். ஆசிரியர்களின் வழிகாட்டுதல் எதிர்கால வளர்ச்சிக்கு துணைநிற்கும்.

பெண்கள் வாழ்வில் குதூகலமாக இருப்பர். தடைபட்ட திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். கணவர் மற்றும் குடும்பத்தாரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும்.

பணியாளர்களுக்கு அதிகாரிகளின் ஆதரவும், சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். ஜூலை 4,5 சிறப்பான நாட்களாக அமையும். பிறந்த வீட்டில் இருந்து உதவி கிடைக்கும்.
புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். ஜூன் 16,17, ஜூலை13,14ல் சகோதரவழியில் பண உதவி கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். ஜூன் 24க்கு பிறகு அக்கம்பக்கத்தினர் தொல்லை இருக்காது.

* நல்ல நாள்: ஜூன் 16,17,22,23,24,25,26,30, ஜூலை 1,4,5,10,11,12,13,14
* கவன நாள்: ஜூன் 18,19 ஜூலை 15,16
* அதிர்ஷ்ட எண்: 2,3
* நிறம்:மஞ்சள், வெள்ளை.

பரிகாரம்
●  தினமும் காலையில் சூரிய நமஸ்காரம்
●  வெள்ளியன்று ராகு, கேதுவுக்கு அர்ச்சனை
●  தேய்பிறை அஷ்டமியன்று பைரவர் வழிபாடு

பகிர்க copied
 
மேலும் புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206) »
temple news
அசுவினி: நேர்மையாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான மாதமாகும். கேது பூர்வ ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: எப்போதும் முதன்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வரும் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: எடுத்த முடிவில் உறுதியாக இருந்து நினைத்ததை சாதித்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: கனிவான குணமும் பிறருக்கு உதவி செய்யும் மனமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஒவ்வொன்றையும் அனுபவத்தின் வழியாக கற்று முன்னேற்றம் அடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar