Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மிதுனம்: (மிருசீரிடம் 3,4, திருவாதிரை, ... சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) சிறப்பான மாதம் சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) ...
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) பணவரவு அதிகரிக்கும்
எழுத்தின் அளவு:
கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) பணவரவு அதிகரிக்கும்

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2019
01:06

சுக்கிரன் ஜூன்29ல் உங்கள் ராசிக்கு 11-ம் இடத்திற்கு வந்து நன்மை தருவார்.  ராசிக்கு 6ல் உள்ள சனி,கேது நன்மை தருவார்கள். பொருளாதார வளம் அதிகரிக்கும். பகைவர் சதியை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள்.  உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். ஆடை, ஆபரணம் வாங்கி மகிழலாம்.

குருபகவான் உங்கள் ராசிக்கு  5ம் இடத்தில் இருக்கிறார். இது மிக சிறப்பான நிலை.  திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். பொருளாதார வளத்தை அதிகரிக்கச் செய்வார். பெண்களால் மேன்மை உண்டாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

குடும்பத்தில் சுக்கிரனால் பணவரவு அதிகரிக்கும். சொந்தபந்தங்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். கணவன், மனைவி இடையே அன்பு நீடிக்கும். ஜூலை4,5ல் பெண்கள் உதவிகரமாக இருப்பர். விருந்து, விழா என சென்று வருவீர்கள். ஜூன்30,  ஜூலை1ல் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் இருக்கும். ஆனால் ஜூலை 10,11,12ல் அவர்கள் வகையில்  மனக்கசப்பு வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும்.

போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலையை அடைவர்.சகபெண் ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். தனியார் துறையில் வேலைபார்ப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். அதிகாரிகளின்  ஆதரவு ஓரளவு கிடைக்கும். அரசு ஊழியர்கள் வேலையில் கவனமுடன் இருக்கவும். சிலர் திடீர் இடமாற்றத்தை சந்திக்க வாய்ப்புண்டு. தற்போது உங்களுக்கு பிடிக்காததாக இடமாற்றம் இருந்தாலும், எதிர்காலத்தில் சாதகமானதாக அமையும். ஜூன் 27,28,29ல் சிறப்பான பலனை காணலாம். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம்.

தொழில், வியாபாரத்தில் சீரான வளர்ச்சி ஏற்படும். அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். தொழில் விஷயமாக யாரிடமும் வாக்குவாதத்தை வைத்துக் கொள்ள வேண்டாம். கூட்டாளிகளின் வகையில் பிரச்னை வரலாம். சூரியனால் பொருள் விரயம் ஏற்படலாம்.

இருப்பினும் பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் முன்னேற்றம் அடையும். வாடிக்கையாளர் மத்தியில் நற்பெயர் கிடைக்கும். ஜூன் 29க்கு பிறகு  வங்கி கடன் எளிதாக கிடைக்கும். ஜூலை2,3,6,7ல் சந்திரனால் சிறு தடைகள் வரலாம். ஜூன்18,19, ஜூலை15,16 ல் எதிர்பாராத வகையில் பணம் வர வாய்ப்புண்டு.

கலைஞர்கள் சிறப்பான நிலையில் இருப்பர். ஜூலை 2க்கு பிறகு புகழ், பாராட்டு கிடைப்பது அரிது. அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் எதிர்பார்த்த பதவி கிடைக்கப் பெறுவர். பணப்புழக்கமும் இருக்கும். ஜூன்16,17, ஜூலை13,14 ல்  மனக்குழப்பம் ஏற்படலாம்.

மாணவர்கள் ஆசிரியர்களின் வழிகாட்டுதலை தவறாமல் பின்பற்றவும். புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் அக்கறையுடன் படிக்கவும். இருப்பினும் குருவால் மேற்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். சிலர் வெளிநாட்டில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கப் பெறுவர்.

விவசாயிகள் நல்ல வருமானத்தைக் காணலாம். நெல், சோளம், மஞ்சள், தக்காளி, பழவகைகள் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும். கால்நடை வகையில் எதிர்பார்த்த பலன் பெற இயலாது. கறுப்பு நிற தானியங்கள் பயிரிடுவதை தவிர்க்கவும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தடைபடலாம். வழக்கு, விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம். புதிய வழக்குகளில் சிக்க வேண்டாம்.

பெண்கள் வாழ்வில் குதூகலமாக இருப்பர். தடைபட்ட சுபநிகழ்ச்சிகள் கைகூடும். கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். குடும்பத்தாரின் மத்தியில் நன்மதிப்பு கிடைக்கும். அண்டைவீட்டார் அனுகூலமாக இருப்பர். சுயதொழில் புரியும் பெண்கள் அதிக லாபம் காண்பர்.

ஜூலை 8,9ல் ஆடம்பர பொருட்கள் வாங்கலாம். புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். ஜூன்20,21ல் சகோதரவழியில் பணமும், உதவியும் கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள்.

உங்களால் குடும்பம் சிறப்படையும். செவ்வாயால் ஏற்பட்ட உடல் உபாதைகள் ஜூன் 24க்கு பிறகு மறையும்.

* நல்ல நாள்: ஜூன் 18,19,20,21,27,28,29,30 ஜூலை 1,4,5,8,9,15,16
* கவன நாள்: ஜூன் 22,23,24 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 4,6
* நிறம்: மஞ்சள், சிவப்பு

பரிகாரம்
●  ஏகாதசியன்று பெருமாளுக்கு துளசி மாலை
●  தேய்பிறை அஷ்டமியன்று பைரவர் வழிபாடு
●  சதுர்த்தியன்று விநாயகர் கோயில் வழிபாடு

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar