பதிவு செய்த நாள்
13
ஜூன்
2019
01:06
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வரதர் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அத்தி வரதர் வைபவத்துக்காக, 12.89 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடப்பதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் வரதர் கோவிலில், ஜூலை, 1ம் தேதி முதல், அத்தி வரதர் வைபவம் துவங்க வுள்ளது. வெளியூர், வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வசதிக்காக செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து, மாவட்ட நிர்வாகம் கூறியதாவது:
* வரதராஜ பெருமாள் கோவில் உட்புறத்தில், இரு சுத்திகரிப்பு இயந்திரங்கள், வெளிப்புறம், நான்கு சுத்திகரிப்பு இயந்திரங்கள் பொருத்தப்பட உள்ளன. நகரின் முக்கிய பகுதிகளில், ஆறு புதிய சுத்தகரிப்பு இயந்திரங்கள் பொருத்தப்படவுள்ளன
* இது தவிர, 96 இடங்களில் குடிநீர் தொட்டிகள் அமைக்கப்படுகின்றன
* கோவில் அருகே, காவல் கட்டுப்பாட்டு அறையும், நகரை சுற்றி முக்கியப் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களும் அமைக்கப்படுகின்றன
* காதார துறையின் மூலமாக வாகன மண்டபம், திருமங்கையாழ்வார் சன்னதி, மேற்கு மாடவீதி, வாலாஜாபாத் நுழைவு போன்ற தற்காலிக பஸ் நிறுத்தங்களில் சிறப்பு மருத்துவ முகாம் ஏற்படுத்தப்படுகிறது
* அத்தி வரதர் வைபவத்துக்காக, காஞ்சிபுரம் நகராட்சி மூலம், 4.37 கோடி ரூபாய், மின்வாரியம் மூலம், 92.37 லட்சம் ரூபாய், நெடுஞ்சாலைத் துறை மூலம், 4.96 கோடி ரூபாயில் பணி
* ஹிந்து சமய அறநிலையத் துறை மற்றும் உபயதாரர்கள் மூலம், 2.52 கோடி ரூபாய், குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக, 10 லட்சம் ரூபாய் என, 12.89 கோடி ரூபாய் செலவில், பணிகள் துவக்கப்பட உள்ளன.இவ்வாறு நிர்வாகம் கூறியுள்ளது.வைபவம் நடக்கும் நாட்கள் ஜூலை 1 - ஆகஸ்ட் 17
* தரிசன நேரம்:
* காலை, 6:00 - மதியம், 2:00
* மதியம், 3:00 - இரவு, 8:00
(ஆனி கருடசேவை, ஆடி கருடசேவையின்போது, மாலை, 6:00 - இரவு, 9:00 மணி பொது தரிசனம் ரத்து) தற்காலிக பஸ் நிலையம் ஓரிக்கை ஒலிமுகமதுபேட்டை பச்சையப்பன் கல்லூரி வளாகம் (பஸ் நிறுத்தத்திலிருந்து கோவிலுக்கு, 10 பஸ்கள், 10 நிமிடங்களுக்கு ஒருமுறை இயக்கம்) தரிசனத்திற்கு வழி
* பொது தரிசனம்: - கிழக்கு ராஜகோபுரம், தேசிகர் சன்னிதி வழி சிறப்பு தரிசனம் - கிழக்கு ராஜகோபுரம், தேசிகர் சன்னிதி, வசந்த மண்டபம் வழி மற்றொரு தரிசனம் -மூலவர் சன்னிதி, தாயார் சன்னிதி, மேற்கு ராஜகோபுரம் வழி கழிப்பறைகள் ஏற்பாடு கோவிலை சுற்றி - ஆண்கள் - 11; பெண்கள் - 11 சின்ன காஞ்சிபுரம் - 36 பெரிய காஞ்சிபுரம் - 92(நகராட்சியில் ஏற்கனவே, 70 கழிப்பறைகள் உள்ளன)
வாகனங்கள் நிறுத்தும் இடம்: பச்சையப்பன் கல்லூரி, நசரத்பேட்டை திருவீதி பள்ளம் பெரிய தோட்டம் ஒலிமுகமது பேட்டை