பதிவு செய்த நாள்
13
ஜூன்
2019
01:06
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் திருக்கோயில் தல வரலாற்றை பக்தருக்கு விளக்கும் வகையில் ஜூன் 10 ல் ராவண சம்ஹாரத்துடன் ராமலிங்க பிரதிஷ்டை விழா துவங்கியது.
விழா நிறைவு நாளான நேற்று (ஜூன்., 12ல்) ராமாயண வரலாற்றில், இலங்கையில் சீதையை மீட்டு வந்த ராமருக்கு ஏற்பட்ட பிரமஹத்தி தோஷம் நீங்கிட சிவலிங்கம் சிலை எடுத்து வர அனுமான் சஞ்சீவி மலைக்கு செல்கிறார். அனுமான் வர தாமதம் ஆனதால் ராமேஸ்வரம் கடற்கரை மணலில் சீதை உருவாக்கிய சிவலிங்கத்திற்கு பூஜை செய்தனர்.
பிறகு சிலையுடன் அங்கு வந்த அனுமான் சினம் கொண்டு, சீதை உருவாக்கிய சிலையை வாலில் கட்டை இழுக்க முயற்சி செய்த போது வால் அறுந்து விடுகிறது. இதன் பின் வரும் காலத்தில் பக்தர்கள் அனுமான் கொண்டு வந்த சிலைக்கு முதலில் பூஜை செய்வார்கள் என ஸ்ரீராமபிரான் தெரிவித்தார்.
இதனை நினைவு கூறும் விதமாக நேற்று (ஜூன்., 12ல்) கோயில் குருக்கள் சந்தோஷ் அனுமான் வேடமிட்டு சிவலிங்கத்தை தூக்கி கொண்டு பயபக்தியுடன் வந்தார்.பின் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு பூஜை, மகா தீபாராதனை நடத்தியதும், ராமலிங்க பிரதிஷ்டை விழா நிறைவு பெற்றது. கோயில் இணை ஆணையர் கல்யாணி, உதவி கோட்ட பொறியாளர் மயில் வாகனன், கண்காணிப்பாளர் கக்காரின்,பேஷ்கார்கள் கமலநாதன், கலைசெல்வம், கண்ணன் உட்பட ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.