விருதுநகர்: விருதுநகர் பராசக்தி வெயிலுகந்தம்மன் கோயில் தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
இக்கோயில் வைகாசி விழா கடந்த 4 ல் துவங்கி 10 நாட்களாக நடந்து வருகிறது. தினமும் அம்மன் பல்வேறு மண்டபகப்படிகளில் எழுந்தருளி வாகனங்களில் விதி உலா வந்து அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த 11 ல் பொங்கல் , நேற்று அக்னி சட்டி ஏந்தி பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர். இதை தொடர்ந்து நேற்று மாலை கும்ப பூஜை, யாக பூஜை நடக்க வெயிலுகந்தம்மன் , மாரியம்மன் தேருக்குள் எழுந்தருள தேரோட்டம் நடந்தது. அம்பாள் எழுந்தருளிய தேரை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர்.