பழநி: பழநியில் பலத்த காற்று வீசிய நேரங்களில் முருகன் கோயில் ரோப்கார் நிறுத்தப்பட்டதால், பக்தர்கள் பாதிக்கப்பட்டனர்.
தமிழக மலைக் கோயில்களில், பழநி முருகன் கோயிலில்தான் ரோப்கார் சேவை உள்ளது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி பயணிக்கின்றனர். பழநியில் நேற்று காலை முதல் மாலை வரை பலத்த காற்று வீசியது. இதனால் ரோப்கார் சேவை அடிக்கடி பாதிக்கப்பட்டது. காற்று குறைந்த நேரங்களில் மட்டும் மீண்டும் இயங்கியது. இதனால் அதில் பயணம் செய்ய வந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.வின்ச் ஸ்டேசனில் நீண்டநேரம் காத்திருந்து சிரமப்பட்டனர். சில இடங்களில் மரக்கிளை முறிந்து மின்தடை ஏற்பட்டது. பழநி- திண்டுக்கல் ரோட்டில் சில இடங்களில் பேரிக்கார்டுகள் கீழே விழுந்தன. திண்டுக்கல் ரோடு, புதுதாராபுரம் ரோடு, உடுமலை ரோட்டில் குவிந்துள்ள மண் பலத்தகாற்றில் புழுதி பறந்ததால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.