பதிவு செய்த நாள்
14
ஜூன்
2019
02:06
உடுமலை: உடுமலை அருகே வாளவாடி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று (ஜூன்., 14ல்) நடக்கிறது.உடுமலை, வாளவாடியில், மாரியம்மன், ஊர் சக்தி விநாயகர், பால விநாயகர் மற்றும் பாலமுருகன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று (ஜூன்., 13ல்) துவங்கியது. நேற்று (ஜூன்., 13ல்), கணபதி ஹோமம், விநாயகர் பூஜை, வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரம், கும்பஸ்தாபனம்,யாகசாலை, வேதிகார்ச்சனை, வழிபாடுகள் நடந்தது. மாலையில், விமான கலசம் வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.இன்று (ஜூன்., 14ல்), அதிகாலை, இரண்டாம் கால யாக பூஜை நடக்கிறது. காலை, 6:00 மணிக்கு ஊர் விநாயகர் சன்னதி விமான கும்பாபிஷேகம் நடக்கிறது. காலை, 7:30 மணிக்கு, மாரியம்மன், விநாயகர், பாலமுருகன் சன்னதிகளுக்கான மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.