பதிவு செய்த நாள்
17
ஜூன்
2019
02:06
கமுதி: கமுதியில் உள்ள கோடி அற்புதர் என்னும் புனித அந்தோணியார் சர்ச் திருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கி கடந்த 10 நாட்களாக நடந்தது. நேற்று முன்தினம் (ஜூன்., 15ல்) அலங்கரிக்கப்பட்ட தேர் பவனி முக்கிய வீதிகளில் சென்றது.
கமுதி ஆர்.சி., கிறிஸ்தவ சபைக்கு பாத்தியப்பட்ட கோடி அற்புத புனித அந்தோணியார் சர்ச்சில் ஆண்டுதோறும் தேர் பவனி திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. திருவிழாவை முன்னிட்டு தினமும் ஜெபமாலை, நவநாள் திருப்பலி, சிறப்பு மறையுறை, நற்கருணை ஆசிர்வாதம் உட்பட நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் தேவாலய பாதிரியார் எஸ்.ஆர். ஜஸ்டின் திரவியம், மற்றும் வெளியூர் பாதிரியார்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து தேர் பவனி துவங்கி கமுதியின் முக்கிய வீதிகள் வழியாக விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில், புனித அந்தோணி யாரும், மற்றொரு தேரில் புனித சவேரியார், மற்றும் சப்ரங்களில் புனித மிக்கேல் அபி தூதர், புனித செபஸ்தியர் ஆகியோரின் திருவுருவங்கள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.
தேர்பவனியில் இன்னிசைகச்சேரி, வாண வேடிக்கைகள் நடந்தது. விழா ஏற்பாடுகளை பாதிரியார் எஸ்.ஆர். ஜெபஸ்டியன் திரவியம், விழா கமிட்டியினர் செய்தனர்.