தேவகோட்டை: தேவகோட்டை ராம்நகரில் உள்ள உலக மீட்பர் ஆலய விழாவின் நிறைவு நாளான நேற்று (ஜூன்., 16ல்) நவநாள் சிறப்பு திருப்பலி நடந்தது. இந்த ஆலயத்தில் கடந்த 7ந் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. ஒன்பது நாட்களும் சிறப்பு திருப்பலி நடந்தது. நல்லிணக்கம் நற்செயல் தலைப்பில் மறை உரையாற்றினார்.
விழாவின் நிறைவு நாளான நேற்று (ஜூன்., 16ல்) மறை மாவட்ட முதன்மை குரு ஜோசப் லூர்துராஜா தலைமையில் பங்கு பாதிரியார் சேசு முன்னிலையில் சிறப்பு திருப்பலி நடந்தது. அதை தொடர்ந்து உலக மீட்பரின் தேர்பவனி நடந்தது. தேர் பவனிக்கு பின் நற்கருணை ஆசியோடு விழா நிறைவு பெற்றது. பங்கு இறைமக்கள் பங்கேற்றனர்.