மதுரை மீனாட்சி அம்மன் கோயில்ஊழியர்களுக்கு முதலுதவி பயிற்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஜூன் 2019 02:06
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஊழியர்களுக்கு, அவசரகாலத்தில் ஆக்ஸிஜன் சிலிண்டர் உள்ளிட்ட உயிர் காக்கும் கருவிகளை கையாள்வது மற்றும் முதலுதவி பயிற்சி அளிக்கப்படும், என அரசுத் தரப்பில் தெரிவித்ததை பதிவு செய்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, வழக்கை முடித்து வைத்தது.காரைக்குடி வழக்கறிஞர் மணிகண்டன் தாக்கல் செய்த பொதுநல மனு:மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு, நாட்டின் பல பகுதிகளிலிருந்து பக்தர்கள் வருகின்றனர். மதுரை வில்லாபுரம் மகேஸ்வரி 62. இவர் மே 17 ல் இக்கோயிலுக்கு வந்தார். திடீர் மாரடைப்பால் சுருண்டு விழுந்து, இறந்தார்.
பக்தர்களின் அவசர உதவிக்கு கோயில் வளாகத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும். ஆம்புலன்ஸ் வசதி செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மணிகண்டன் மனு செய்தார்.நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.புகழேந்தி அமர்வு விசாரித்தது. அரசுத் தரப்பில், அவசர உதவிக்காக ஒரு நிறுவனம் ஆன்புலன்ஸை அன்பளிப் பாக வழங்கியுள்ளது. கோயில் அருகில் நிறுத்தப்பட்டுள்ளது. கோயில் வளாகம் என்பதால் அதற்குள் மருத்துவமனை அமைப்பது சாத்தியமில்லை. அவசரகாலத்தில் ஆக்ஸிஜன் சிலிண்டர் உள்ளிட்ட உயிர்காக்கும் கருவிகளை கையாள்வது மற்றும் முதலுதவி செய்வதற் கான பயிற்சி கோயில் ஊழியர்களுக்கு அளிக்கப்படும், என தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.