உசிலம்பட்டி:உசிலம்பட்டி அருகே கணவாய் மலையில் உள்ள அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் தவக்கால திருப்பயண யாத்திரையும், சிறப்பு திருப்பலியும் நடந்தது. மதுரை, தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் சிலுவை ஏந்தி சிலுவைப் பாதை பாடல்களை பாடியபடி மலையில் உள்ள யேசு சிலுவைக்கு சென்றனர். அங்கு சிறப்பு திருப்பலி நடந்தது. பின்னர் வோளங்கண்ணி ஆலயத்தின் அருகில் மதுரை மறை மாவட்ட பேராயர் பீட்டர் பெர்ணாண்டோ தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. மதுரை தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கத்தோலிக்க பங்குத் தந்தைகள் இணைந்து திருப்பலி நடத்தினர். ஏற்பாடுகளை உசிலம்பட்டி பங்குத்தந்தை ஜோசப் செய்திருந்தார்.