’இன்பத்தில் மேலானது நற்குணமுள்ள பெண்ணுடன் வாழ்வது என்கிறார் நபிகள் நாயகம். நல்ல குணமுள்ள பெண்ணைத் தேர்ந்தெடுத்து திருமணம் புரிய வேண்டும். ஒரு பெண்ணை குறிப்பிட்ட மாப்பிள்ளைக்கு பேசிக் கொண்டிருக்கும் போது, இன்னொருவர் குறுக்கிட்டு இடைஞ்சல் செய்வது கூடாது.
ஏதாவது காரணத்தால் தடைபட்டால் மட்டுமே அடுத்தவர் தலையிட வேண்டும். பெண்ணுடன் பேசிய பிறகே திருமணத்திற்கு சம்மதிப்பதாகச் சொல்வது கூடாது. வேண்டுமானால் அவளைப் பார்த்துக் கொள்ளலாம். மணம் முடிக்க முடிவு செய்ததும் ’மஹர்’ என்னும் விவாக கட்டணத்தை கொடுத்து விட வேண்டும். பெண் என்பவள் புனிதமானவள். இல்லத்திற்கு வரும் அரசி. அவள் ஒரு மாப்பிள்ளையை விரும்பாவிட்டால், வற்புறுத்தி திருமணம் செய்து வைப்பது கூடாது. மணமகள் ஒப்புதல் அளித்தால் மட்டுமே திருமணம் செய்ய வேண்டும். திருமணத்திற்கு இரண்டு சாட்சியாளர்கள் வேண்டும். திருமணம் செய்ய பொருள் வசதி இல்லாதவர்கள், இறைவன் அருளால் பணம் கிடைக்கும் வரையில் உறுதியுடன் கற்பை பாதுகாக்க வேண்டும்.