இல்லறம் குறித்த அந்தரங்க விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்வது கூடாது. கணவர் தான் சாப்பிட்டு முடித்ததும், மனைவியையும் சாப்பிடச் செய்ய வேண்டும். புத்தாடை வாங்கினால் மனைவிக்கும் வாங்கித் தர வேண்டும். ஏதேனும் தவறு செய்தால் பெண்களைப் பழிப்பது கூடாது.
அவர்களின் ஒரு குணம் வருத்தம் அளித்தாலும், இன்னொரு குணம் மகிழ்ச்சி அடையச் செய்யும் என்பதை உணர வேண்டும். பெண்களை நல்ல முறையில் கண்ணியமாக நடத்த வேண்டும். முடியை அலங்கரித்துக் கொள்ள வேண்டும். அன்றாடம் பல் துலக்க வேண்டும். நாகரிகத்துடன் நடக்க வேண்டும். கடுகடுத்த முகத்துடன் ஒருபோதும் பேசுவது கூடாது. ஒருவருக்கொருவர் நன்றியுடன் இருக்க வேண்டும். கணவர் கற்புடையவராக இருந்தால், மனைவியும் கற்புடையவளாக இருப்பாள். சிற்றின்பத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டவர்களை இறைவன் நேசிப்பதில்லை.