பதிவு செய்த நாள்
21
ஜூன்
2019
11:06
கோவை: சுந்தராபுரம், அண்ணா நகர் இரண்டாவது வீதியில் உள்ள, டினி விங்க்ஸ் பள்ளி வளாகத்தில், வித்யா விநாயகர் கோவில் அமைந்துள்ளது.சில மாதங்களாக திருப்பணி நடந்து வந்தது; நிறைவடைந்ததை அடுத்து, கும்பாபிஷேக விழா, கடந்த, 17ல் துவங்கியது. 18ல், மகா கணபதி ேஹாமம், முதற்கால யாக வேள்வி, 19ம் தேதி காலை முதல் இரவு வரை, சிறப்பு ேஹாமங்கள், பூஜைகள் நடந்தன. நேற்று காலை, சிவாச்சாரியார்கள் வழிபாட்டை தொடர்ந்து, மகா கும்பாபிஷேகம் நடந்தது; தெத்துப்பட்டி, ராஜகாளியம்மன் கோவில் தலைமை அர்ச்சகர் சதாசிவ குருக்கள் நடத்தி வைத்தார்.