சோழவந்தான், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு ஜூன் 19 இரவு நுாதன கோ ரத வீதி உலா நடந்தது. முன்னதாக பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் விசஷே அபிஷேக ஆராதனைகள் நடந்தன. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். நேற்றிரவு யானை வாகனத்தில் அம்மன் எழுந்தருளினார். முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி சுசீலாராணி மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.