மதுராந்தகம்: கோதண்டராமர் கோவில் பெரிய தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. மதுராந்தகத்தில் உள்ள ஏரிகாத்த கோதண்டராமர் கோவிலில், ஆனி மாத பிரம்மோற்சவம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான, திருத்தேர் வீதியுலா, நேற்று காலை நடைபெற்றது. எட்டாம் நாள் நிகழ்வான இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, தேரை வடம் பிடித்து இழுத்தனர்.தேரில், கருணாகரப் பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி சகிதம் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நான்கு மாட வீதி வழியாக பவனி வந்த திருத்தேர், இறுதியில் நிலையை அடைந்தது.