நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அடுத்த, ஆனந்தாஸ்ரமத்தில், 74வது ஆண்டு குருபூஜை விழா, நாளை, நடக்கிறது. காலை, 7:00 மணிக்கு யாகத்துடன் விழா தொடங்குகிறது. 8:45க்கு அபிஷேக ஆராதனை, 10:00 மணிக்கு பக்தி பாடல்கள், 11:00 மணிக்கு, நீத்தார் பெருமை என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நடக்கவுள்ளது. தொடர்ந்து, 1:00 மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை பெத்தன்ன சுவாமிகள் மரபினர் செய்து வருகின்றனர்.