பதிவு செய்த நாள்
27
ஜூன்
2019
02:06
கிருஷ்ணராயபுரம்: கண்ணமுத்தாம்பட்டி கிராமத்தில், அன்னகாமாட்சி அம்மன் கோவிலில், கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, காஞ்சி காமகோடி பீடம் விஜயேந்திர சுவாமிகள், சிறப்பு பூஜை, பசுங்கன்றுகளுக்கு கோ பூஜை செய்தார். பின்னர் அவர் பக்தர்களுக்கு ஆசி வழங்கி பேசியதாவது: கிராமங்கள் செழிப்பாக இருக்க, மக்கள் நேர்மை, உண்மை, தர்ம சிந்தனை யுடன் இருக்க வேண்டும். தாய், தந்தையரை நல்ல முறையில் பாதுகாத்து, அன்புடன் அறத் துடன் வாழ வேண்டும். குலதெய்வத்தை வழிபட வேண்டும். இதனை கடைபிடித்தால் மனிதர் கள் நல்ல முறையில் இந்த பிறவியில் சிறப்புடன் வாழ முடியும். தர்மம் காக்க மக்களுக்கு உதவி செய்ய வேண்டும். தண்ணீர் பந்தல், அன்னதானம், கல்வி என, இயன்றவரை மற்றவர் களுக்கு உதவி செய்து, எளிமையுடனும் ஒழுக்கத்துடன் வாழ்க்கையை மேம்படுத் திக் கொள்ள வேண்டும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் அன்பாகவும் பண்பாகவும் இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு கல்வி அளித்து, சமூகத்தில் நல்ல நிலையை அவர்களுக்கு உருவாக்க வேண்டும். அறத்தை கடை பிடித்தால், நமக்கு தேவையான இறை அருள் கிடைக்கும். மக்கள் இயற்கையை நேசிக்க வேண்டும். மழை பெய்ய, மரங்களை வளர்த்து பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.