பதிவு செய்த நாள்
27
ஜூன்
2019
02:06
சென்னிமலை: சென்னிமலை, முருகன் கோவிலில் உள்ள முடி காணிக்கை கூடம், குளியல் அறைகள் மற்றும் டிக்கெட் கொடுக்கும் இடங்களை, நவீனபடுத்த வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற, சென்னிமலை முருகன் கோவில் உள்ளது. 2014 ஜூலை, 7ல் கும்பாபிஷேகம் நடந்தது. இதற்கு முன்பு, 10 ஆண்டுகளாக பல்வேறு திருப் பணிகள் மலை கோவிலில் நடந்தன. அப்போது, மலை அடிவராத்தில் உள்ள பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தும் கொட்டகை, பக்தர்கள் குளிக்கும் குளியல் அறைகள், கழிவறை கள், பக்தர்களுக்கு வாகன டிக்கெட் வழங்கும் இடம், பக்தர்கள் காத்திருப்பு கூடங்கள் அமைப்பதில் கவனம் செலுத்தவில்லை. முடி கொட்டகையில் மழை பெய்தால், சுற்றிலும் மழை நீர் உள்ளே புகுந்து விடுகிறது. குளியல் அறைகள் பராமரிக்கப்படவே இல்லை. தொட்டி அருகே நின்று குளிக்கும் நிலை தான் உள்ளது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருவதால், புதியதாக குளியல் அறைகள் நவீன படுத்தி கட்டப்பட வேண்டும்.
செவ்வாய்கிழமை தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவதால், பஸ் பயணிகள் காத்திருப்பு அறைகள் மிக முக்கியாக உள்ளது என, பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.