பதிவு செய்த நாள்
28
ஜூன்
2019
12:06
கும்மிடிப்பூண்டி: சாமிரெட்டிகண்டிகை, ஏகவள்ளி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, நேற்று, அம்மன் வீதியுலா சென்று, கிராம மக்களின் படையல்களை ஏற்று கொண்டார். கும்மிடிப்பூண்டி அடுத்த, சாமிரெட்டிகண்டிகை கிராமத்தில் உள்ளது, ஏகவள்ளி அம்மன் கோவில். அந்தக் கோவிலில், மூன்று நாட்களாக, திருவிழா நடைபெற்றது. கூழ் ஊற்றுதல், வாடை பொங்கல் நிகழ்வுகளை அடுத்து, மூன்றாவது நாளான நேற்று, அம்மன் வீதியுலா நடைபெற்றது. கிராமத்தைச் சேர்ந்தவர்கள், தங்கள் வீட்டின் முன், படையல் வைத்து, அம்மனை வரவேற்றனர்.