அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் ஜல்லிகட்டு தெய்வங்களான முத்தாலம்மன், காளியம்மன் கோயிலில் மழை பெய்ய வேண்டி சிறப்பு வருண வேள்வி யாகம் நடந்தது. யாகசாலையில் பல்வேறு புனித தீர்த்தக்குடங்கள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. முல்லைபெரியாறு, வைகை, சாத்தையாறு அணை மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ய வேண்டி ஒரு லட்சத்து எட்டு மூலமந்திரங்கள் முழங்க சிவாச்சார்யார்கள் வருண ஹோமம் நடத்தினர். அலங்காரவிநாயகர், முனியாண்டி, அய்யனார் கருப்பணசுவாமி உள்ளிட்ட காவல் தெய்வங்களுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்தனர்.