பதிவு செய்த நாள்
28
ஜூன்
2019
12:06
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தட்சணாயன புண்ணிய காலம் என அழைக்கப்படும், ஆனி பிரம்மோற்சவம் வரும், 8ல், கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
அன்று அதிகாலை, 5:00 மணிக்கு கோவில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள, தங்க கொடிமரத்தில் வேதமந்திரங்கள் முழங்க, கொடி ஏற்றப்படும். அப்போது, அலங்கார ரூபத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர் எருந்தருள்கிறார். தொடர்ந்து விநாயகர், சந்திரசேகரர், பராசக்தி அம்மன், அலங்கார ரூபத்தில் மாட வீதியில் வலம் வரும் நிகழ்ச்சி நடக்கும். பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தொடர்ந்து, 10 நாட்களுக்கு கோவிலில், சிறப்பு பூஜைகள், தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில், சுவாமி வீதி உலா நடக்கும். பிரம்மோற்சவத்தின் நிறைவாக வரும், 17ல், அய்யங்குளத்தில் சுவாமி தீர்த்தவாரி நடக்க உள்ளது.