கிருஷ்ணராயபுரம்: விட்டுகட்டி, அய்யனாரப்பன் சுவாமி கோவில் தேர்த்திருவிழா சிறப்பாக நடந்தது. கிருஷ்ணராயபுரம் அடுத்த, லாலாப்பேட்டை விட்டுகட்டி அய்யனாரப்பன் சுவாமி கோவில் தேர்த்திருவிழா நேற்று முன்தினம் (ஜூன்., 26ல்) தொடங்கியது. இதில், சின்ன தேரில் அய்யனாரப்பன் சுவாமி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, திரு வீதி உலா எடுத்து செல்லப் பட்டது. நேற்று (ஜூன்., 27ல்) காலை கிடா வெட்டு நிகழ்ச்சி நடந்தது. மேலும், பெரிய திருத்தேரில் சுவாமி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.லாலாப்பேட்டை சுற்றியுள்ள கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.