திண்டுக்கல்: திண்டுக்கல் மலையடிவாரம் சீனிவாச பெருமாள் கோயிலில் ஆனித்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. நேற்று பெருமாள், அம்பாள் ஸ்ரீதேவி, பூமாதேவிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. நண்பகல் 12:00 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாசி தரிசனம் செய்தனர். இரவு 7:00 மணிக்கு அன்ன வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவில் ஜூலை 6 மாலை 6:00 மணிக்கு மேல் 7:30 மணிக்குள் திருக்கல்யாணம், ஜூலை 8 ல் திருத்தேர் நகர்வலம், ஜூலை 10 ல் தெப்ப உற்சவம், ஜூலை 11 ல் ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. அனைத்து நாட்களும் சுவாமி வீதியுலா நடக்கிறது.