திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு ராஜகோபுரம் அருகே உள்ள பெரிய நந்தி பெருமானுக்கு, சிறப்பு அபிஷேகம் நடந்தது.
தேய்பிறை பிரதோஷத்தை திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ராஜகோபுரம் அருகே உள்ள பெரிய நந்தி பெருமானுக்கு பால், பன்னீர், தேன், சந்தனம், குங்குமம், இளநீர் உள்ளிட்ட, பல்வேறு திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.