உடுமலை வேங்கடேச பெருமாள் கோவிலில் யாக சாலை பூஜை துவக்கம்
பதிவு செய்த நாள்
01
ஜூலை 2019 12:07
உடுமலை: உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவில், மகா கும்பாபிஷேக, யாக சாலை பூஜைகள் நேற்று துவங்கின. வரும் 4ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.
உடுமலை, தளி ரோடு செங்குளம் அருகே, உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவில் புதிதாக அமைக்கப்பட்டு வருகிறது. கருவறை, முன் மண்டபம் என முழுவதும் கற்கோவிலாக அமைக்கப்பட்டுள்ளது.ஸ்ரீ வேங்கடேச பெருமாள், ஸ்ரீ பத்மாவதி தாயார், ஸ்ரீ ஆண்டாள் தாயார் ஆகியோர் தனித்தனி சன்னதிகளிலும், எம்பெருமாள் அவரதார மூர்த்திகளான, ஸ்ரீ லட்சுமி ஹயக்கிரீவர், ஸ்ரீ சக்கரத்தாழ்வார், ஸ்ரீ லட்சுமி நரசிம்மர், ஸ்ரீ தன்வந்திரி, ஸ்ரீ விஷ்வக்ஷேனர் ஆகியோரும் தனித்தனி சன்னதிகளிலும் எழுந்தருளுகின்றனர். மேலும், ஸ்ரீஆஞ்சநேயர் மற்றும் ஆழ்வார்களுக்கும் தனித்தனி சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன.ஸ்ரீவேங்கடேச பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேகம், வரும் 4ம் தேதி நடக்கிறது. கும்பாபிஷேக யாக சாலை பூஜைகள், நேற்று மாலை துவங்கின. சுவாமிகளின் உற்சவ திருமேனிகள் யாகசாலையில் எழுந்தருளின. தொடர்ந்து வேத, திவ்ய பிரபந்த மந்திரங்கள் முழங்க, யாகசாலை பூஜைகள் நடந்தன. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.இன்று காலை, 7:00 மணிக்கு, வாஸ்து ேஹாமம், சன்னதி கோபுரங்களுக்கு கலச ஸ்தாபனம் மற்றும் இரண்டாம் கால யாக சாலை பூஜைகள் நடக்கின்றன. மாலை, 6:00க்கு, ஜலாதிவாசம், யாகம் நடக்கிறது.2ம் தேதி, காலை, 8:00க்கு, சதுஸ்த்தான அர்ச்சனம், ேஹாமம், பிற்பகல், 2:30க்கு, மூர்த்திகளுக்கு, 17 கலச ஸ்தாபனம், திருமஞ்சனம், கண் திறப்பு, ேஹாம பூஜைகள் நடக்கின்றன.3ம் தேதி, காலை, 9:00 மணி முதல், யாக சாலை பூஜை, ஸ்ரீ பத்மாவதி தாயாருக்கும், ஸ்ரீஆண்டாளுக்கும் சிறப்பு திருமஞ்சனம், மாலை, 3:00க்கு, ஸ்ரீ வேங்கடேசபெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், மாலை 6:00க்கு, யாக சாலை பூஜைகள் நடக்கின்றன.4ம் தேதி, காலை, 5:00க்கு, விஸ்வரூபம், 7:00க்கு, சதுஸ்தான அர்ச்சனம், ேஹாமம், காலை, 9:00 முதல் 10:00 மணிக்குள், யாகசாலை நிறை வேள்வி, யாத்ரா தானம், கும்பம் புறப்பாடு மற்றும் சிம்ம லக்னத்தில் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.
|