பழநி: முருகன் மலைக்கோயில் யானை பாதை வழியில் கட்டடத்தில் பெரிய தேன்கூடுகள் உள்ளது, அவைகளை அகற்ற கோயில் நிர்வாகம் முன்வர வேண்டும், என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பழநி முருகன்கோயிலுக்கு வரும் பக்தர்களில் பெரும்பாலானவர்கள் மலைக்கு செல்வதற்கு யானைப்பாதையை பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் வள்ளிசுனை அருகே மண்டபங் களின் அடிப்பகுதியில் பெரிய அளவில் தேனீக்கள் கூடுகட்டி வாழ்கின்றன. பலத்த காற்றுவீசும்போது தேனீக்கள் பறந்துசெல்கின்றன.
யானைப் பாதை வழியாக நடந்துசெல்லும் பக்தர்களை தேனீக்கள் தாக்குகிறது. சிலர் தேன் கூட்டின் மீது கற்களை வீசி எறிகின்றன். ஆகையால் மலையில் பக்தர்களை அச்சுறுத்தும் வகையில் உள்ள தேன் கூடுகளை தீயணைப்புதுறை வீரர்கள் மூலம் அகற்ற கோயில் நிர்வாகம் முன்வர வேண்டும், என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.