பதிவு செய்த நாள்
01
ஜூலை
2019
03:07
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் கிராம கோயில் பூஜாரி களுக்கு நடந்த பயிற்சி முகாம் நிறைவு விழாவில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
தமிழக விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ராமேஸ்வரம் கோசுவாமி மடத்தில் ஜூன் 16ல் கிராம கோயில் பூஜாரிகளுக்கு கோயில் பூஜை வழிபாட்டு பயிற்சி முகாம் துவங்கியது.
இம்முகாமில் தமிழ், சமஸ்கிருதத்தில் காயத்ரி மந்திரம், தியான ஸ்லோகம் மற்றும்
தேவாரம், திருவாசகம் ஆகிய பாடல்களை பூஜாரிகளுக்கு புரோகிதர்கள் கற்று கொடுத்தனர். 15 நாள்கள் நடந்த முகாமில் 146 பூஜாரிகள் பங்கேற்றனர். நிறைவு நாளான நேற்று(ஜூன்.,30ல்), பயிற்சி பெற்ற பூஜாரிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
இவ்விழாவில் கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமி, கிராம கோயில் பூஜாரிகள் பேரவை அறங்காவலர் ஆர்.ஆர். கோபால்ஜி, தமிழ் விஷ்வ ஹிந்து பரிஷத் நிறுவன தலைவர் எஸ்.வேதாந்தம், வட தமிழக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மாரிமுத்து, மாநில கிராம கோயில் பூஜாரிகள் பேரவை அமைப்பாளர் சோமசுந்தரம், ராமநாதபுரம் வழக்கறிஞர் நாகராஜன், ராமேஸ்வரம் விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகி ராமசுப்பு மற்றும் பலர் பங்கேற்றனர்.